21 August 2005

மல்டிமீடியா வழி இயற்பியல் கல்வி

கடந்த ஆகஸ்ட் 8, ஹிந்துவில் ஒரு செய்தி. உலகின் ஒரு பிரபலமான, பள்ளிகளுக்கான இயற்பியல் தொடர் ஒன்று தமிழில் மொழிபெயர்க்கப்படுவதாகக் கூறுகிறது அச்செய்தி.

இங்கே தான் ஆசிரியர், ஒரு பாடத்தை புத்தகத்திலிருந்து அப்படியே வாசித்து, மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது(!!) நடக்கும். அமெரிக்காவிலும் மற்ற முன்னேறிய நாடுகளிலும், புத்தகங்களைத் தவிர ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், இரு வழி உரையாடல் (interactive) ஆகியவற்றை உள்ளடக்கிய மல்டிமீடியா மூலமான கற்பிக்கும் முறை வெகு பிரபலம்.

யு.எஸ். ஸிலுள்ள அன்னன்பெர்க் பவுண்டேஷன் (Annenberg Foundation) என்ற அமைப்பு தயாரித்த பள்ளிகளுக்கான அறிவியல் தொடர் உலகளவில் வெகு பிரபலம். இந்த அமைப்பு இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், மல்டிமீடியா குறுந்தகடுகளாக (multimedia CDs/DVDs) உருவாக்கியுள்ளது. இதன் சிறப்பம்சம், வகுப்புவாரியாக தரப்படுத்தப்பட்டு (graded content) பாடத்திட்டத்தைக் கொண்டதுதான்.

உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, எனப்படும் அமைப்பு மேற்கொண்டிருக்கும் இத்திட்டம், தமிழகத்தின் பள்ளிகளில் இயற்பியல் கற்பிக்கப்படும் முறையை பெரிதும் மேம்படுத்தும். இந்த பாடவரிசைகள் ஏற்கனவே பல நாடுகளில்,
மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை தமிழில் தான் முதன்முறையாக மொழிபெயர்க்கப்படுகிறது. இதன் 5 வருட லைசன்சுக்காக மட்டும் அன்னன்பெர்க் அறக்கட்டளைக்கு 60,000 டாலர்கள் செலவிடவேண்டிய நிலையில், திட்டத்திற்கு மொத்தம் ஒரு லட்சம் டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தன்னார்வ நிறுவனங்களும், தமிழக அரசும் ஒத்துழைக்கும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு எந்தளவு உண்மையாகும் என்பது இனி தான் தெரிய வேண்டும்.

இதனை பல பள்ளிகளுக்கும் வினியோகிப்பதற்கு தனி நபர் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் உ.த.மொ.அ, ஒரு பள்ளிக்கு மட்டும் ஒரு லட்சம் செலவாகும் (தொலைக்காட்சி, DVD பிளேயர், மென்பொருள் உட்பட) என்று கணக்கிட்டுள்ளது.

தொடர்புக்கும் மேலும் விவரங்களுக்கும், இந்த வலைப்பக்கத்தைப் பார்க்கவும்.

உ.த.மொ.அ க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

1 Comments:

At 22 August, 2005 01:59, Anonymous Anonymous said...

What an awesome blog, really like it! Like rv awnings? Please look at rv awnings if you do!

 

Post a Comment

<< Home